Saturday, March 25, 2017

மாப்புள்ள உயர்ந்த இடத்தில் வேலை பாக்குறார்


மாப்புள்ள உயர்ந்த இடத்தில் வேலை பாக்குறார்
எங்க
வெளி நாட்டுல

Photo


============================================================
ஒரு ஆண், தன் வாழ்க்கையில் கீழே விழாமல் இருக்க, பெண் துணை 'கண்டிப்பா தேவை'. (சொன்னா நம்பமாட்டீங்க, அதான் போட்டோ போட்டேன்)

Photo

============================================================














Bookmark and Share

உன் தாத்தா பேர சொல்லு


ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.

அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. .

"உன் பேர் சொல்லு"

"பழனி"

"உன் அப்பா பேரு"

"பழனியப்பா"

அடுத்தப் பையன எழுப்பி,

உன் பேர் சொல்லு

மாரி

உன் அப்பா பேரு

மாரியப்பா

அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி.

உன் பேர் சொல்லு

பிச்சை

உன் அப்பா பேரு

பிச்சையப்பா

இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,

சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்ச
அடுத்தப் பையன எழுப்பினாரு.

முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு.

(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)

ஜான்

இப்பொ உன் பேரைச் சொல்லு

ஜான்சன்
கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,

உன் அப்பா பேர சொல்லு,

"ரிச்சர்டு"

உன் பேரு,

"ரிச்சர்டசன்"

கொலவெறி ஆயிட்டாரு,
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,

அடுத்த பையன எழுப்பி,

உன் தாத்தா பேர சொல்லு,

அப்பாவோட தாத்தாவா?,

அம்மாவோட தாத்தாவா?

ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,

அப்பாவோட தாத்தான்னாரு

மணி,

சரி அப்பா பேரு?,

ரமணி,

உன் பேரு?,

வீரமணி

அப்புரம் என்ன! இந்த பள்ளிக்கூடம் பக்கமே தலை வச்சி படுக்க மாட்டேன் சொல்லிட்டு ஒரே ஓட்டமா தலை தெறிக்க ஓடிட்டாரு.........!


Bookmark and Share

அந்த கறை போகாது....


ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻‍♂

காதலித்து வந்தனர்


ஒரு நாள்

இருவரும்

திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்

பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
............

திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே


என்ன செய்வது
என்று சொன்னாள்
...........

அதற்கு அந்த பையன் சொன்னான்...


நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?

உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்


பிறகு இருவரும்

பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்கு

தெளிவாக
எடுத்து சொன்னார்கள்.........


பெண்ணின் அப்பா சொன்னார்


என்னிடம்

1000 ருபாய் மட்டுமே உள்ளது


திருமணத்தை
எப்படி
நடத்துவது
என்று
சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான்
1000ரூபாயே.போதும்

அதிலேயே திருமணத்தை நடத்தலாம்
நாளைக்கு நீங்க
ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......

மறுநாள் எல்லாரும்
ரெஜிஸ்டராபீஸுக்கு

சென்றார்கள்


பையன்
மாமனாரிடம் சொன்னான்

நீங்க போய்டு
அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான்

திருமணத்தை பதிவு செய்தார்கள்.......

எல்லாருக்கும் இணிப்பும்..வழங்கினார்கள்

திருமண வாழ்க்கை ஆரம்பித்தார்கள.........

ஆனால் பையன் விபத்து ஒன்றில் உடனே இறந்து வி்ட்டான்

அவன் போட்டிருந்த

துனியெல்லாம்
இரத்தக்கறை


அந்த துனிகளை அப்படியே....வைத்துவிட்டு

பையனுக்கு இறுதி சடங்கை நடத்தி முடித்தார்கள்


4-5 நாட்கள் கழித்து

அந்த துனிகளை எடுத்து

வண்ணாணிடம்
கொடுத்தாள் ...அந்த
பெண்......

ஆனால் அவனோ...
இதை என்னால் துவைக்க
முடியாது...இதை எவ்வளவு துவைத்தாலும்....இரத்தக்கறை போகாது.... தூக்கி கிடாசுங்கம்மா......னு சொல்லிட்டு போய்ட்டான்....


அவளோ
............நான் இந்த துனியை தூக்கி எறிய மாட்டேன்......நானே துவைத்து கொள்கிறேன்......அவர் நினைவாக வைத்து கொள்கிறேன் என்றாள்...

முதல் நாள் துவைத்தாள் இரத்தக்கறை போகவில்லை.......

அன்று இரவு ஒரு கிழவி அந்த பெண்ணின் கணவில் வந்தாள்....


விகாரமா சிரிச்சபடியே கிழவி சொன்னாள்.....அந்த கறை போகாது.......💀💀💀💀💀💀


மறுநாள் அந்த

பெண் மீண்டும் அந்த துனியை துவைத்தாள்
...ஆனால் கறை போகவில்லை..........அன்று இரவும் அதே கிழவி கணவில் வந்தாள்......


முதல் நாள் சொன்னதையே மீண்டும் சொன்னாள்....


3வது நாள் அந்த பெண் மீண்டும் துணியை
துவைக்க ஆரம்பித்தாள்


யாரோ கதவை தட்டினார்கள்

போய் கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱

கணவில் வந்த கிழவி நின்று கொண்டிருந்தாள்..........


கையில் surf excel சோப்பு வைத்திருந்தாள் அந்த கிழவி......

கிழவி சொன்னாள்.... சும்மா சோப்புல கறை போகாது surf excel போடு.......


அந்த
பெண்ணும்

அந்த சோப்பை போட்டு துவைத்தாள்.......


கறை போய்விட்டது..........

ஆம்..விடாபிடியான கறைக்குsurf execl போடுங்க.......

புரியது....
இதை படச்சி முடிச்ச உடனே பத்திகினு வருதா எரிச்சல்..
என்ன பன்றது...
இதை எனக்கும் ஒருத்தன் post பன்னானே.......😜😜😜😜😌😌😌😜😌😜😜😜😜😝
அதால நீங்க

மத்தவங்க வயத்தெரிச்சல கொட்டிக்கோங்க🤣🤣😃😄😄😁😆

Bookmark and Share

எப்புடி ஜி இப்புடி நம்புறாங்க


எப்புடி ஜி  இப்புடி நம்புறாங்க














Bookmark and Share

Wednesday, March 22, 2017

தயவுசெய்து என்னோடு நிறுத்திக்கொள்


மனைவிக்கு அழைத்தேன்.
"ஹலோ" என நீட்டி முழங்கியது மறுமுனையில் ஒரு ஆண்குரல்.
குழப்பம் மேலிட, நான் தான் தவறாக எவரையும் அழைத்துவிட்டேனோ என்று கைபேசியின் திரையைப் பார்க்க, சரியான எண்தான். 'home' என்றுதான் இருந்தது.
"யாரு பேசுறது?" என்றேன் மென்மையாக.
"மொத நீ யாருய்யா ? ஒனக்கு யாருய்யா வேணும் ?" என்று அதிரடித்த குரலைவைத்தே, ஒற்றையாளாக பத்துப்பேர்களை துவம்சம் செய்யக்கூடிய நபரெனத் தோன்றியது.
எனது குழப்பம் எல்லைமீறிவிட்டது. என் மனைவியின் கலையார்வங்கள் பற்றி மிகநன்றாக அறிவேன். நிச்சயமாக மிமிக்ரியில் எல்லாம் அவளுக்கு விருப்பமிருக்குமென நான் நினைக்கவில்லை.
"இல்லங்க இது என் ஒய்ப் நம்பர்".. என ராகமிழுத்தேன்.
" பொஞ்சாதிகூட பேசனும்னா எனக்கேய்யா கால் பண்ண ? யாருய்யா நீ?" என்றார்..
இம்முறை சுதாரித்துக்கொண்டேன். இந்தக்கலிகாலத்திலும் கிராஸ்டாக் அழைப்புகளின் குழப்படிகளை எண்ணி வியந்தவனாக, அழைப்பை துண்டித்தேன்.
அஞ்சியபடியே மறுபடியும் அழைக்க இம்முறை மனைவிதான் பேசினாரள். நடந்த விஷயத்தைக்கூறியபொழுது மூன்று நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் சிரித்தாள்.
பேசிமுடித்துப் போனை வைத்தபின் கடவுளிடம் கடுமையாக பிரார்த்தித்துக்கொண்டேன்.
"தயவுசெய்து இம்மாதிரியான கிராஸ்டாக் சம்பவத்தை எல்லாம் என்னோடு நிறுத்திக்கொள். தப்பித்தவறிகூட என் மனைவி எனக்கு அழைக்கையில் அதை நிகழ்த்திவிடாதே. மனைவிகளின் கற்பனாசக்தி அளப்பரியது"
ஒரு மனுசனுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது

Bookmark and Share

ஓவரா சீன் போட்டா இப்படித் தான்


ஒரு சலவைத் தொழிலாளிகிட்ட ஒரு நாயும், ஒரு கழுதையும் இருந்துச்சு.
ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டிருக்கும்போது வீட்டுக்குள்ள ஒரு திருடன் வந்துட்டான்.
சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு.
"சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு?", நாய் குரைக்கவில்லை.
அதைப்பார்த்த கழுதை, "என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்"-னு கத்த ஆரம்பிச்சுது.
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவை தொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. "கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்க" கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

# நீதி:
கம்பெனியில் என்ன வேலை கொடுக்கபட்டிருக்கோ அதை மட்டும்தான் செய்யணும். ஓவரா சீன் போட்டா இப்படித் தான்....

Bookmark and Share

உலக வன நாள்! (மார்ச் 21)
























Bookmark and Share